சிவகங்கை மாவட்டத்தில், தனியார் துறையின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, 17.03.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள்; இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார்; நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
மேலும், இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும்; வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்..
இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது எனவும், இம்முகாமில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu