வரவு-செலவு கணக்கு: துண்டறிக்கையாக தயாரித்து மக்களிடம் விநியோகித்த ஊராட்சி மன்றத்தலைவர்..!

வரவு-செலவு கணக்கு: துண்டறிக்கையாக தயாரித்து மக்களிடம் விநியோகித்த ஊராட்சி மன்றத்தலைவர்..!
X

வரவு-செலவு கணக்குகளை துண்டறிக்கையாக விநியோகம் செய்த சிவகங்கை மாவட்டம், கே.நெடுவயல் ஊராட்சித்தலைவர் சரவணன்.

ஊராட்சியில் நடைபெறக்கூடிய வரவு செலவு கணக்கை மக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினார்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவைச் சார்ந்த ஊராட்சியின் வரவு-செலவு கணக்கை துண்டறிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கே.நெடுவயல் ஊராட்சியின் 2021 ஆண்டிற்கான வரவு – செலவு கணக்குகளை அச்சடித்த துண்டறிக்கையாக தயாரித்து ஊராட்சியிலுள்ள பொது மக்களுக்கு விநியோகித்து ஊராட்சித் தலைவர் சரவணன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட,ம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில் ஓராண்டுக்கான வரவு செலவு கணக்குகளை துண்டறிக்கையாக தயாரித்தார்.இதை பொதுமக்களிடம் விநியோகிக்கும் நிகழ்வை திருப்பத்தூர் போலீஸ் டிஎஸ்பி ஆத்மநாதன் தலைமையில் உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் கலாராணி முன்னிலையில் கிராம மக்களுக்கு துண்டறிக்கையை ஊராட்சித் தலைவர் சரவணன் வழங்கினார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் போது கிராம மக்களிடையே அரசு பணியியை செய்திட ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டேன் என்றும் ஒவ்வோராண்டும் ஊராட்சி மன்றத்தில் நடைபெறக்கூடிய வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பேன் என்று சரவணன் வாக்குறுதி வழங்கினார்.அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை திருப்பத்தூர் போலீஸ் டிஎஸ்பி ஆத்மநாதன் தலைமையில் கே.நெடுவயல், அய்யாபட்டி, பன்னைப்படி, பழைய நெடுவயல், வெள்ளையங்குடிபட்டி, காயாம்பட்டி, மேலாந்தெரு உள்ளிட்ட கிராம மக்களுக்கு துண்டறிக்கையை ஊராட்சித் தலைவர் சரவணன் வழங்கினார்.

இந்நிகழ்வில், உலகம்பட்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சேதுராமன், தலைமைக் காவலர் சரவணன், துணைத் தலைவர் கரும்பாயிரம், ஊர் முக்கியஸ்தர்கள் கருத்தசாமி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் பொன்னுச்சாமி, மற்றும் கிராம மக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!