சிவகங்கை அருகே புதியபள்ளிக் கட்டிடம்: அமைச்சர் திறப்பு

சிவகங்கை அருகே புதியபள்ளிக் கட்டிடம்: அமைச்சர் திறப்பு
X

தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்து  

தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ36. லட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் வகுப்பறை கட்டப்பட்டுள்ளன

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் ரூ36.00 இலட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

சிவகங்கை: மாவட்ட கல்வித்துறையின் சார்பில், தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். மாணாக்கர்களுக்கு கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வருவது மட்டுமன்றி, அனைத்துப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென தனிகவனம் செலுத்தி, அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அவ்வாறு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் உறுதுணையாக இருந்து, அரசிற்கு மேலும் வலு சேர்த்து வருகின்றனர். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கென அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தன்னர்வலர்களும் மற்றும் கொடையாளர்களும் பொதுமக்களின் பங்களிப்புடனும் பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

அதுமட்டுமன்றி, பள்ளிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திடும் பொருட்டு, அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட பல்வேறு தன்னார்வலர்களும் அரசுடன் இணைந்து தங்களது பங்களிப்பை ஏற்படுத்திடும், பொருட்டு, தங்களால் இயன்ற அளவிலான நிதியுதவியினை அளித்து உதவி வருகிறார்.

அதன்படி, திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நாளுக்கு நாள் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில் அதற்கேற்றவாறு, இப்பள்ளியின் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும், அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசுடன் இணைந்து அரசிற்கு உறுதுணையாக இருந்திடும் வகையிலும், இப்பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கெனவும், கொடையாளர், துவார் சி.சந்திரசேகரன், அரசுப் பங்களிப்புத் தொகையான ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டுடன் அவருடைய பங்களிப்பாக ரூ.09.00 இலட்சம் தொகையினையும் வழங்கி, மொத்தம் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில், இப்பள்ளியில் புதிய இரண்டு வகுப்பறைக் கட்டிடங்கள் அமைவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். இனிவரும் காலங்களிலும் இப்பள்ளியின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, இப்பள்ளியின் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும்.

இதுபோன்று மாணாக்கர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளிக்கல்வித்துறைக்கென ரூ.40,000 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, மாணாக்கர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் மட்டுமன்றி, அவர்கள் சிறப்பாக பயில்வதற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, மாணாக்கர்கள் படிப்பில் மட்டுமன்றி, விளையாட்டு, கலைகளிலும் சிறந்து விளங்கி, தங்களது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் சிறந்து விளங்கிட வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தேசிய திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு படிக்கும் 24 மாணாக்கர்களுக்கும், தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 மாணாக்கர்களுக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர், பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இப்பள்ளியில் நடைபெற்ற கிராமியம் மற்றும் பரதம் தொடர்பாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், பங்கு பெற்ற மாணாக்கர்கள் குழுவிற்கு தன் சொந்த நிதியிலிருந்து தலா ரூ.5,000ஊக்கத் தொகையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலா நாராயணன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சந்திரகுமார், பள்ளித் தலைமையாசிரியர் மதிவாணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story