கீழடியில் கட்டப்படும் பணியினை அமைச்சர்கள் ஆய்வு
கீழடியில் அமைச்சர்கள் எ வ வேலு, பெரியகருப்பன் மற்றும் மூர்த்தி
ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கீழடி அகழ்வாராய்ச்சி நிலையத்தினை அமைச்சர்கள் எ.வ.வேலு, கேஆர்.பெரியகருப்பன் மற்றும் மூர்த்தி ஆகியோர் இன்று (25.03.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
ஆய்வின் பின் அமைச்சர் வேலு தெரிவிக்கையில்,
நீண்டநாட்களாக நடைபெற்று வந்த கட்டிடத்தை ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டேன். காலதாமதத்தை தவிர்த்திட ஒப்பந்ததாரரை அழைத்துப் பேசினேன். விரைவாக பணி நடைபெற்று வருகிறது. அரசின் சார்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஏறத்தாழ ரூ.11.00 கோடி ஆகும். கட்டிடம் கட்ட வந்த நேரத்திலேயே சில பணிகள் தளத்திலிருந்து பார்க்கும் போது சில வகைகள் அதிகமாகவும், குறைவாகவும் உள்ள நிலையில்தான் இருக்கிறது. தற்போது, இங்கே பார்த்தால் பணிகள் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. மே 30-ஆம் தேதிக்குள் ஒப்பந்ததாரர் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடைய நோக்கமே 3000 ஆண்டுகள் பழமையான தமிழருடைய வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாகும். இதுபோன்ற கீழடி போன்ற பகுதிகளிலே தோண்டி எடுக்கின்ற பொருட்களை மையமாக வைத்துத்தான் தமிழர்களின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு என்று நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. அதனால்தான் அந்தப்பொருட்களை எல்லாம் இங்கு காட்சியமாக வைக்கும் போது, தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டுமன்றி, உலகத்தில் உள்ள அனைவரும் வந்து பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்ட இந்த கீழடி சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்திருப்பது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
விபத்து ஏற்படுவதில் ஏற்கனவே முதல் மாநிலமாக இருக்கிறது. தற்போது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் விளைவாக, விபத்துக்கள் குறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசு நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு டோல்கேட் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில், சென்னையிலுள்ள சுங்கச்சாவடிகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu