சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மே. 5ம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை

சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மே. 5ம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை
X

பைல் படம்

சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மே. 5ம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசின் அரசாணையின்படி புத்தர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 05.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை, திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இதேபோல், சிவகங்கை மாவட்டத்திலும், மே.5-ம் தேதி இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story