வாழ்ந்து காட்டுவோம் திட்ட காலி பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி(பைல் படம்)
சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு மண்டல ஆலோசகர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (மதிப்பு கூட்டு சங்கிலி) வலுப்படுத்துதல் போன்ற பணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலை வாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், மானாமதுரை மற்றும் தேவகோட்டை வட்டாரங்களை சார்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் வாயிலாக ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனைவோர், குழு தொழில், உற்பத்தியாளர் குழு, உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றிற்கு தொழில் சார் ஆலோசனைகள் வழங்கவும் நடைமுறையில் உள்ள உற்பத்தி சார் தொழில் நுட்பங்களை வழங்கவும், மதிப்புக் கூட்டு செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை வழங்க மண்டல ஆலோசகர் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர், பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விவரங்களை, இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நேரடியாகவோ, தபால் மூலமாகவோ மாவட்ட திட்ட அலுவலகத்தில் 27.12.2022-ஆம் தேதி மாலை 5. மணிக்குள் சமர்ப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகுதிகள்: தொழில் நுட்ப ஆலோசகர், பணிகளுக்கு பண்ணை தொழில் நெல், கடலை, பயர் வகைகள், தென்னை உற்பத்தி ,கல்வித்தகுதியும்,பண்ணை சார் தொழில் ,கல்வித்தகுதியும் மற்றும்பண்ணை சாரா தொழில் (பாரம்பரிய கைவினைப் பொருட்கள், அப்பளம், சர்க்கரை, தையல், மண்பாண்டம், பனை இலை பொருட்கள், கடல் சங்கு மற்றும் வெல்டிங்) கல்வித் தகுதியும் மற்றும் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வருடம் அனுபவம் இருக்க வேண்டும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களில் 5 பணியிடங்கள் உள்ளன.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள்படிவத்தில் 27.12.2022-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தங்களது விண்ணப்பத்தின் மீதான பரிசீலினை மாநில திட்ட மேலாண்மை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் மாநில திட்ட மேலாண்மை அலகின் முதன்மை செயல் அலுவலரால் தேர்வு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தின் வாயிலாகவும், மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பல்நோக்கு கட்டிடம், கோர்ட் வாசல், மேலூர் ரோடு, சிவகங்கை என்ற முகவரியிலும், மற்றும் 04575 – 248096என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu