சிவகங்கை அருகே கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை அருகே  கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
X

தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிறப்பு பார்வையாளராக பங்கேற்று  பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர், ஆண்டிற்கு 6 முறை கிராமச்சபைக் கூட்டங்கள் நடத்திட சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தeர்

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிறப்பு பார்வையாளராக பங்கேற்று 220 பயனாளிகளுக்கு ரூ.55.90 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், தட்டட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், தலைமை வகித்து நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், முன்னிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:

தமிழ்நாடு முதலமைச்சர், புதிய அறிவிப்பின்படி, நவம்பர் - 1 உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக்கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது.அதில், அனைத்து ஊராட்சிகளிலும் கிராமச் சபைக் கூட்டம் இன்றையதினம் நடைபெறுகிறது.. கலைஞர் ஆட்சிக்காலத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய 4 நாட்களில் கிராமச்சபைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தது.

கிராமத்தில் நடைபெற்ற பணிகள், அப்பணியின் முன்னேற்றம், புதியதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்து மக்களுடன் கலந்து கலந்துரையாடி செயல்படுத்துவதற்கென ஆண்டிற்கு நான்கு முறை கிராமச்சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர், ஆண்டிற்கு 6 முறை கிராமச்சபைக் கூட்டங்கள் நடத்திட சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தட்டட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டிற்கு மேலக்குடியிருப்பில் மெட்டல் சாலை,சிமெண்ட் சதலை மெட்டல் சாலை, தனிநபர் உறிஞ்சுகுழி, சமுதாய உறிஞ்சுகுழி அமைத்தல் ஆகியப் பணிகளுக்கு ரூ.25.17 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஊராட்சியில் தனிநபர் வரப்புக்கட்டுதல், சிமெண்ட் சாலை, ஓரக்கு மெட்டல் சாலை, சமுதாயக்கூடம் அருகில் வடிகால் அமைத்தல், மரக்கன்று நடுதல், முருங்கை தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சாலை முதல் தட்டட்டி சாலை வரை சிமெண்ட் ரோடு அமைத்தல், கூடுதல் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் மற்றும் சமுதாய கழிப்பறை அமைத்தல் நடைபெற்று வருகிறது.

ஊராட்சியின் வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை வழங்க அரசு தயார்நிலையில் இருந்து வருகின்றன. பொதுமக்களாகிய நீங்கள் இதனை கருத்தில் கொண்டு, தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இதையடுத்து , மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 162 உறுப்பினர்களுக்கு ரூ.43,10,000 மதிப்பீட்டில் வங்கிக்கடன் இணைப்பிற்கான காசோலைகளும், 6 உறுப்பினர்களுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலைகளும், 6 உறுப்பினர்களுக்கு ரூ.60,000மதிப்பீட்டில் நலிவுற்ற தன்மை குறைப்பு நிதிக்கான காசோலைகளும் என மொத்தம் 174 பயனாளிகளுக்கு ரூ.46,70,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000

உதவித் தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், கொரோனா காலக்கட்டத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மறுவாழ்விற்கான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து, 1 குடும்பத்தைச் சார்ந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.3,00,000 வீதம் மொத்தம் ரூ.6,00,000க்கான காசோலைகளையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 1 பயனாளிக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 1 பயனாளிக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.10,000மதிப்பீட்டில் திருமண உதவித் தொகையும், 2 பயனாளிகளுக்கு இலவச பட்டாவிற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.1,00,000

மதிப்பீட்டில் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு 1,50,000மதிப்பீட்டில் நலத்திட்டங்களையும், பொது சுகாதாரத்துறையின் சார்பில், 5 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் மற்றும் 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 10,000மதிப்பீட்டில் மருந்துப் பெட்டகங்களும்,

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு கார்டுகளும், ஊராட்சித்துறையின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 6 தூய்மைக் காவலர்கள், 1 தூய்மைப் பணியாளருக்கு கேடயங்களும், 2 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கேடயங்களும்,மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், பணியில் இருந்த போது இறந்தவர்களின் 2 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் என மொத்தம் 220 பயனாளிகளுக்கு ரூ.55,90,000 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.வானதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சி.பிரபாகரன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) (பொ) தனபால், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) கு.அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.விஜய்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அ.சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சு.தனலெட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா