மயான சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் :அமைச்சர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியில் ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ரூ.87.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமன்றி, அனைத்துப்பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு அனைத்து நலத்திட்டங்கள் மூலம் பொதுமக்களை பயன்பெறச் செய்வது மட்டுமன்றி பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறம் ஆகியப்பகுதிகளில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரி பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கொடையாளர்களின் பங்களிப்புடன் ரூ.19.00 இலட்சமும் பேரூராட்சித்துறையின் சார்பில் ரூ.38.00 இலட்சமும் என மொத்தம் ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தலுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, முஸ்லீம் பெருமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க முஸ்லீம் மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதற்கென எனது சார்பிலும் பங்களிப்பு நிதியாக ரூ.10.00 இலட்சமும் மற்றும் துறைரீதியாக ரூ.20.00 இலட்சமும் என, மொத்தம் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் முஸ்லீம் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தலுக்கான பணியும் மொத்தம் மேற்கண்ட 2 பணிகளுக்கு ரூ.87.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தலுக்கான கட்டுமானப் பணிகள் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு கொடையாளர்களாக திகழ்ந்துள்ள முன்னாள் அமைச்சர் மாதவன், குடும்பத்தினர்களான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், சாந்தி செழியன் மற்றும் எம்.எம்.போர்ஜிங், எல்.ஜெ.டெக்ஸ்டைல்ஸ், ஆர்.எம்.எஸ். குடும்பத்தினர், ரெங்கநாதன் காந்திமதி எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இப்பகுதியில் போட்டித் தேர்விற்கான பயிற்சி மையத்தினை எஸ்.எஸ்.மணியன், ஏற்படுத்தி தனது தொண்டு நிறுவனத்தின் சார்பில், இப்பகுதியில் உள்ளவர்களை அரசுப்பணிக்கு தயார் செய்யும் வகையில் போட்டித் தேர்விற்கான பயிற்சி மையத்தை நடத்தி வருவதற்கும் எனது பாராட்டுகள்.
மேலும், சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சியில், கடந்த 2021-2022-ஆம் ஆண்டிற்கு தமிழக அரசால் ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுஇ பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து,நடப்பு நிதியாண்டிலும் ரூ.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதுபோன்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து, திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசுபிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இக்கட்டுமானப் பணிகளை விரைவில் தரமான முறையில் முடிக்கப்பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் பி.அம்பலமுத்து, உதவி இயக்குநர் இரா.ராஜா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆவின் பால்வளத் தலைவர் சேங்கைமாறன், பேரூராட்சிகள் துணைத்தலைவர் டி.செந்தில்குமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர் செந்தில்கிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொன்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu