மருது சகோதரர் நினைவு தினம், தேவர் ஜெயந்தி: சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்.

மருது சகோதரர் நினைவு தினம், தேவர் ஜெயந்தி:  சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்.
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா.

மருது சகோதரர் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் முழுவதுமாக மூடப்படும்

27.10.2024 அன்று 223-வது மருது சகோதரர்களின் நினைவேந்தல் தினம், 30.10.2024 வரை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 62 வது குருபூஜை மற்றும் 117-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் FL2, FL3, உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டார் செய்திக் குறிப்பில், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில், 27.10.2024 அன்று 223-வது மருது சகோதரர்களின் நினைவேந்தல் தினம் மற்றும் 29.10.2024, 30.10.2024 ஆகிய தினங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 62 வது குருபூஜை மற்றும் 117-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற கிளப் மற்றும் ஹோட்டல்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் வருகின்ற 26.10.2024 மாலை 06.00 மணி முதல் 27.10.2024 முழுவதும் மற்றும் 29.10.2024 மாலை 06.00 மணி முதல் 30.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும் என, மாவட்ட தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
video editing ai tool