தமிழ்நாடு தினம்: சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளி சார்பில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தினம்: சிவகங்கை மாவட்ட  இசைப் பள்ளி சார்பில் பல்வேறு  இசை நிகழ்ச்சிகள்
X

கலெக்டர் மதுசூதனரெட்டி (பைல் படம்)

அண்ணா முதல்வராக இருந்தபோது ஜூலை 18, 1968-ல் சென்னை மாநிலம் என்ற பெயரை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்தார்.

தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு ஜூலை 18 அன்று அரசு இசைப்பள்ளியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இந்தியாவில் மாநிலங்களை மொழி வாரியாக பிரித்த போது, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு, கன்னடமொழிகள் பேசும் பகுதிகளைக் கொண்டு கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்னாடக மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. சென்னை மாநிலத்தை மொழி வாரியாக பிரித்து 'தமிழ்நாடு' என்று பெயரிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜூலை 18, 1968-ல் சென்னை மாநிலம் என்ற பெயரை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்தார். அன்றிலிருந்து 'தமிழ்நாடு' பெயர் நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் ஜூலை 18 அன்று தமிழ்நாடு தோன்றிய நாளாக, விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இதையொட்டி ,கலை பண்பாட்டுத்துறை மற்றும் சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பாக தமிழ்மொழி, தமிழ் பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் 18.07.2022 திங்கள் அன்று மாலை 4.00 மணியளவில், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story