சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
X

சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

இதனைத்தொடர்ந்து வருகின்ற 20.09.2023 அன்று தேவகோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது

சிவகங்கை அருகே டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்து முகாம் நடைபெற்றது.

டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் , மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாற்றுத்திறனாளி களுக்கான பல்வேறு வகையான உதவி உபகரணங்களை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), பிஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை) ஆகியோர் முன்னிலையில், வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்தது: தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, மாற்றுத்திறன் கொண்டவர்களின் மறுவாழ்விற்கென எண்ணற்ற திட்டங்களை வழங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார்கள்.

மேலும் , தமிழக அரசின் உத்தரவின் படி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் , நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு,தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில், டாக்டர் கலைஞர் , நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு,சிவகங்கை மருதுபாண்டியர் நகரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து வருகின்ற 20.09.2023 அன்று தேவகோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் ,இதே போன்று முகாமும் நடைபெறவுள்ளது.

இம்முகாம்களில் , மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகிய அட்டைகளை பெறுவதற்கு ஏதுவாகவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையிலும் மருத்துவத்துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், இம்முகாம்களில் அனைத்து சிறப்பு மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டையினையும், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை மற்றம் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடனுதவிகள், திருமண உதவி திட்டம், மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாகஇதற்கென தங்களது பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள இ – சேவை மையத்தின் மூலமாக தங்களுக்கு தேவையான உதவிகள் தொடர்பாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.இதன் மூலம் தாங்கள் விண்ணப்பித்துள்ள கோரிக்கையின் மீது, மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை குறித்தும் அவ்வப்போது அறிந்து கொள்ளலாம்.

இம்முகாமின் வாயிலாக இன்றைய தினம் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10600வீதம் ரூ.1378000 மதிப்பீட்டிலும் மற்றும் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11500வீதம் ரூ.195500மதிப்பீட்டிலும் என, மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1573500மதிப்பீட்டில் உதவி உபகரணங்களும், இதை தவிர இம்முகாமில் கலந்து கொண்டு தற்சமயம் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு, தங்களது வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் அதனை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!