சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
X

பைல் படம்

மார்ச் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது

சிவகங்கை மாவட்டத்தில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின் அரசாணை (நிலை)-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஒர் முன்னோடி முயற்சியாகும்.இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில், நாளது தேதி வரை 4796 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை முன்னதாக வழங்கப்பட்டுள் ளது. மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையில், குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை, பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture