சிவகங்கை மாவட்டத்தில், உயர் ரக பயிர்கள் கண்காட்சி: அமைச்சர் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில், உயர் ரக பயிர்கள் கண்காட்சி: அமைச்சர் திறப்பு
X

பைல் படம்

உயர்தர உள்ளுர்பயிர் இரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை அமைச்சர் தொடக்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில் உயர்தர உள்ளுர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், துவக்கி வைத்து, 100 விவசாயிகளுக்கு ரூ.8.82 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்டங்களை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், நடைபெற்ற உயர்தர உள்ளுர்பயிர் இரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருவது மட்டுமன்றி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களை புதிதாகவும் அறிவித்து, பொதுமக்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள்.நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்ற விவசாயிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் வகையில், அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை செயல்படுத்தப்படுகிறது.

சிவகங்கையிலுள்ள 445 ஊராட்சிகளில்; நடப்பாண்டு 2021-2022-ல், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட 68 ஊராட்சிகள் மற்றும் 2022-2023-ல் 90 ஊராட்சிகளும் என, மொத்தம் 158 ஊராட்சிகளில், முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் அனைத்து கிராமப்புறப்பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, விவசாயிகளின் பொருளாதார வசதி மேம்பாட்டிற்கென பல்வேறு வகையான சலுகைகளும்

வழங்கப்படவுள்ளது. மேலும், விவசாயத் தொழிலுக்கு இணையாக கால்நடை வளர்ப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது., பண்ணைக்குட்டை அமைத்தல், மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக, வங்கிக்கடனுதவிகளும் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகளின் சார்பில் இடம் பெற்றுள்ள வேளாண் கருவிகள், விதைகள் ஆகியவைகளை முறையாக அறிந்து கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களின் ஆலோசனைகளின்படி அரசின் பயன்களை பெற்று பயனடைய வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் உளுந்து, எள், ஜெல் இயற்கை உரங்கள் பெறுவதற்கு ரூ.9,340 மதிப்பீட்டிலான மானியத் தொகைக்கான ஆணைகளையும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.1,63,758 மதிப்பீட்டில் இடுபொருட்கள் பெறுவதற்கு மானியத் தொகைக்கான ஆணைகளையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.780 மதிப்பீட்டிலான தென்னங்கன்றுகளையும்,

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.20,850 மதிப்பீட்டில் மக்காச்சோளம் கிட்டினையும், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டம் 2022-2023-ன் கீழ் 26 பயனாளிகளுக்கு ரூ.20,800மதிப்பீட்டில் உளுந்தினையும், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.4,01,560மதிப்பீட்டில் பின்னேற்பு மானியமாக உளுந்து, கேழ்வரகுகளையும், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.60,110மதிப்பீட்டிலான பண்ணைக்கருவிகள்,

தென்னை-ஒருங்கிணைந்த உர நிர்வாகம், சிங்க் பெறுவதற்கு மானியத்தொகைக்கான ஆணைகளையும், மாநில பருத்தி சாகுபடி இயக்கத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.9,800மதிப்பீட்டிலான பருத்திக் கிட்டினையும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.1,73,614மதிப்பீட்டில் இடுபொருட்களையும், தேசிய உணவு எண்ணெய் இயக்கத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.21,016மதிப்பீட்டிலான தார்பாலின் என ,ஆக மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.8,81,628 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்டங்களை, கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரியமிக்க பல்வேறு சிறப்பு மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் இரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல இரகங்கள் நோய் எதிர்ப்புசக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவக்குணங்கள் கொண்டதாகவும் உள்ளது. மேற்கூறியபடி, பாரம்பரியமிக்க உள்ளுர் இரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் இரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் , இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில், இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்திட அறிவித்துள்ளார். அதனடிப்படையில், சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் இரகங்களை கண்டறிந்து, பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு இரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டந்தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்திட அறிவுரை பெறப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டாவது கண்காட்சி இன்றையதினம் துவங்கப்பட்டு, மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மரபியல் பண்முகத்தன்மை கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இக்கண்காட்சியில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க உள்ளுர் இரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படுத்துதல், விவசாய விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

அதன்பொருட்டு, அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உரிய இரகங்களை காட்சிப்பொருளாக வழங்கி, கண்காட்சியில் பங்கு கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்கி தங்கள் வாழவாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!