சிவகங்கை பூமாலை வணிக வளாகம் காணொலியில் திறப்பு

சிவகங்கை பூமாலை வணிக வளாகம் காணொலியில்  திறப்பு
X

சிவகங்கையில் நடைபெற்ற பூமாலை வணிக வளாகம் திறப்புவிழாவில் பங்கேற்ற ஆட்சியர் ஆஷா அஜித்

காரைக்குடியில் பூமாலை வணிக வளாகத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில், சிவகங்கையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ரூ.27.92 இலட்சம் மதிப்பீட்டில், காரைக்குடியில் பூமாலை வணிக வளாகத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் ஆகியவைகளை காணொளிக்காட்சி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா குத்துவிளக்கேற்றி வைத்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டிலான புதிய வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர், இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

இம்மையமானது, வட்டார அளவில் சேமிப்பு கிடங்குகளுடன் கூடிய, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை, வேளாண்மை பொறியியல் மற்றும் விதைச் சான்று ஆகிய அனைத்துத்துறை அலுவலகங்க ளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க, பொதுவான மையமாக செயல்படுகிறது. இந்த மையங்கள் வாயிலாக தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருட்கள் விநியோகம், ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் செயலாக்கம் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் ஒரே குடையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

இதுவரை, சிவகங்கை மாவட்டத்தில் 3 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 5 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , இதுபோன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சிவகங்கை மாவட்ட வழங்கல் துறை மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ், காரைக்குடி பூமாலை வணிக வளாகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வணிக வளாகத்தில் ரூ.27.92 இலட்சம் மதிப்பீட்டில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அக்கட்டிடங்களையும், தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள்.

இவ்வணிக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு, மகளிர் சுயஉதவிக் குழு தொழில் முனைவோர் தன்மையை பொருத்து, மாதாந்திரம் மற்றும் அரையாண்டு அடிப்படையில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கு மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், காய்கறி, பழங்கள், சிறுதானிய சிற்றுண்டி வகைகள், மாவு, எண்ணெய், உணவகம், செட்;டிநாட்டு பலகாரங்கள், தேநீர், கைவினைப் பொருட்கள், பனைஓலைப் பொருட்கள், தையற்கடை, ஆரிவொர்க், மூங்கில் நாற்காலிகள் போன்ற பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுபோன்று மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் ஆஷாஅஜித்.

இதையடுத்து, வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (2021-2022) கீழ், தலா ரூ.4,480 வீதம் மொத்தம் ரூ.8,960 மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய மின்கலத் தெளிப்பான்களையும், 01 பயனாளிக்கு ரூ.120 மதிப்பீட்டில் முழு மானியத்தொகையுடன் கூடிய தென்னங்கன்றுகளையும் மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலைத்துறையின் இயக்கத்தின் (2023-2024) கீழ், 01 பயனாளிக்கு ரூ.1,75,000 மதிப்பீட்டில் மானியத்தொகையுடன் கூடிய குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஆணையினையும்,

01 பயனாளிக்கு ரூ.1,05,000 மதிப்பீட்டில் மானியத்தொகையுடன் கூடிய பண்ணைக்குட்;டை அமைப்பதற்கான ஆணையினையும், 01 பயனாளிக்கு ரூ.1,00,000மதிப்பீட்டில் மானியத்தொகையுடன் கூடிய மண்புழு உரக்கூடம் அமைப்பதற்கான ஆணையினையும் என மொத்தம் 06 பயனாளிகளுக்கு ரூ.3,89,080 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மொத்தம் 30 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.20,00,000 மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி கடனுதவிக்கான காசோலைகளையும் என ஆக மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.23,89,080 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் கா.வானதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், துணை இயக்குநர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, நகர்மன்றத் தலைவர்கள் சி.எம்.துரைஆன்ந்த்(சிவகங்கை), சோ.முத்துத்துரை(காரைக்குடி), திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், வட்டாட்சியர்கள் பாலகுரு (சிவகங்கை, ப.தங்கமணி(காரைக்குடி), மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!