சிவகங்கை மாவட்டத்தில் தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டத்தில் தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்தில் தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாகவுள்ள 36 பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 மட்டும் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.

பகுதிநேர தூய்மைப் பணியாளர் (தொகுப்பூதியம்) காலிப்பணியிடங்கள் 36 (ஆண்-22, பெண்-14) உள்ளது. இனசுழற்சி பணியிட எண்ணிக்கை விவரம்

முன்னுரிமையுடையவர்:- பொதுப்போட்டி -2, பிற்படுத்தப்பட்டோர் - 1, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 1, மிகப்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்- 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

முன்னுரிமையற்றவர்:- பொதுப்போட்டி - 8, பிற்படுத்தப்பட்டோர் - 4, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) – 1, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 6, அருந்ததியினர் - 1, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்- 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மேற்கண்ட பகுதிநேர தூய்மைப்பணியாளர் (ஆண்,பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.வயது வரம்பு 01.07.2022 தேதியில்இதரப்பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி, தகுதிகளுடன் சிவகங்கை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், 1) பெயர், 2)தகப்பனார் பெயர், 3) பாலினம், 4) பிறந்த தேதி, 5) அஞ்சல் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்), 6) கல்வித்தகுதி, 7) சாதி, 8) முன்னுரிமை விபரம் (ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும், முன்னாள் இராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் கலப்புத் திருமணம்), 9)வேலைவாய்ப்பு பதிவு விபரம் (இருப்பின்), 10) குடும்ப அட்டை எண், 11) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகிய விவரங்கள் மற்றும் வரிசை எண் 4 முதல் 10 வரையுள்ள ஆவணங்களுக்கு சான்று நகல்களுடன் மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும், மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வுக்குப்பின் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் அதன் விபரம் தனியே தெரிவிக்கப்படும். விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!