சிவகங்கை மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள்: மத்திய குழுவினர் ஆய்வு
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மழைநீர் சேகரிப்புப் பணிகளை மத்திய அரசின் சிறப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மழைநீர் சேகரிப்புப் பணிகளை மத்திய அரசின் சிறப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ,ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகளை அரசு துணைச் செயலர்கள் அனுபம் சொனால்கர் மற்றும் அனு கலாத்கர் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் மாவட்ட முழுவதும் 04.07.2022 முதல் 06.07.2022 வரை 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை போன்ற துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள். ஊரணிகள் நிர்மாணப்பணிகள், புனரமைப்புப் பணிகள், அடர்பாடுகள், தடுப்பணை கட்டும் பணிகள், மழைநீர் சேகரிப்புப் பணிகள் ஆகியவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையம்(ஜல் சக்தி கேந்திரா), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வனத்துறை அலுவலகத்தில் ரூர்பன் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை, காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள நாற்றங்கால் பண்ணை மற்றும் காயாஓடை அரசுப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நீர்வளத்துறையின் மூலம் பூங்குடி, இருமதி ஆகிய கண்மாய்களையும் பார்வையிட்டனர்.
திருவேம்பத்தூர் ஊராட்சி, களத்தூரில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஊரணி மற்றும் கல்லல் ஒன்றியம், பொய்யலூரில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட குறுங்காடு மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டுமானப் பணி, நீர்வளத்துறையின் மூலம் கானூர் கண்மாய் தூர்வாரும் பணியினையும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடகுடி குறுங்காடுகள், கொத்தமங்கலம் ஊராட்சி, வடகீழ்குடி கிராமத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய புதுஊரணியினையும்,
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அரையிட்டானேந்தலில் உள்ள கிராம பண்ணைக்குட்டை, துவார் கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நீர்வளத்துறையின் மூலம் கிருங்காக்கோட்டையில் தடுப்பணை கட்டும் பணி, எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், முசுண்டப்பட்டியில் பண்ணைக்குட்டை மற்றும் வரப்பு கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் நிறைவாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அனைத்துத்துறையின் வாயிலாக மழைநீர் சேகரிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மத்திய குழுவினர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ம.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர்கள் ம.மாணிக்கவாசகம், ப.மோகன்தாஸ், க.முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் த.திருப்பதிராஜன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu