மானாமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரம்

மானாமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக  காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரம்
X

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டுக்காளைக்கு நீரில் பயிற்சி அளிக்கும் இளைஞர்

சிவகங்கை மாவட்டத்தில், சிராவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட போட்டி நடத்தப்படுகிறது.

மானாமதுரை கட்டிக்குளம் பகுதியில் இளைஞர்கள் பெரியவர்கள் பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தாங்கள் வளர்க்கும் காளைகளை முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்துக்குப்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் களைகட்டி வருகிறது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போல், சிவகங்கை மாவட்டத்தில், சிராவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட போட்டி நடத்தப்படுகிறது. தைப்பொங்கல் முதல் தொடங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக இப்போதே காளைகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்கிவிட்டனர்.

சிவகங்கை பகுதி காளை வளர்ப்போர். கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளாக மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறாததால் சோர்ந்து போயிருந்தனர். இந்

நிலையில், தற்போது மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்ட காளை வளர்ப்போர். இதற்காக சிவகங்கை, மானாமதுரை, டி. புதூர், கட்டிக்குளம், திருப்புவனம் பகுதிகளில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதிகாலையில் நீண்ட தூரம் நடைப் பயிற்சிக்குப் பின்னர் இளைஞர்கள் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர். தண்ணீரில் மூச்சை அடக்கி படகை போல் சீரும் காளைகள், களத்தில் மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை. பெண்களின் கைகளில் இருந்து சாதுவாக விடுபடும் காளைகள் குவித்துவைக்கப்பட்டுள்ள மண் மேட்டை கொம்புகளால் முட்டி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. பெண்கள் தாங்கள் வளர்க்கும் மயிலக்காளை, செவக்காளை, கருங்காளை என தங்களின் முரட்டுக் காளைகளை குழந்தைகளை போல பயிற்சிக்கு கூட்டி வருகின்றனர். உரிய பயிற்சிக்குப் பின்னர் சத்தான உணவுகளை வழங்கி மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயாராக காத்திருக்கின்றனர காளைகளும் காளை வளர்ப்பவர்களும்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!