சிவகங்கை அருகே அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

சிவகங்கை அருகே அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
X

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மந்திக்கண்மாய் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மந்திக்கண்மாய் ஊராட்சியில் இந்தக்கண்காட்சி நடைபெற்றது

சிவகங்கை அருகே காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மந்திக்கண்மாய் ஊராட்சியில்செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்,புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மந்திக்கண்மாய் ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்ட இப்புகைப்படக் கண்காட்சியில், இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம்,

முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர் , மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக இப்புகைப்படக் கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது என பொதுமக்கள் பாராட்டினர். இப்புகைப்படக் கண்காட்சியினை அமைக்கும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலுவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!