திருப்புவனம் அருகே செய்தி மக்கள் தொடர்பு துறையின் புகைப்பட கண்காட்சி
திருபுவனம் அருகே செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ராஜகம்பீரம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியில் ,தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.
மேலும்முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தலின் போது அறிவித்த திட்டங்களின் செயல்படுத்தல், சிறப்பு திட்டங்களில் பயன் பெற்ற மக்கள், சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் பற்றிய புகைப்படங்கள் இக்கண்காட்சியில் அதிக அளவில் இடம் பெற்று இருந்தன.
மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக இப்புகைப்படக் கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது என பொதுமக்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இப்புகைப்படக் கண்காட்சியினை, அமைக்கும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டனர். இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த தகவல்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu