கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாட்கள் அறிவிப்பு..

Keeladi Museum
X

Keeladi Museum

Keeladi Museum-கீழடி அருங்காட்சியகத்திற்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும், தேசிய விடுமுறை நாட்களிலும் விடுமுறை அறிவித்து, தமிழக அரசு உத்தரவு.

Keeladi Museum-சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடியில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையிலும், தமிழகத்தின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறுகின்ற வகையிலும், புதிதாக கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம், தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதி திறந்து வைத்தார்.

உலகளவில் புகழ் பெறுகின்ற வகையிலும், பண்டைய தமிழர்களின் புகழினை, பறைசாற்றுகின்ற வகையிலும், உலக நாடுகள் வியக்கின்ற வகையிலும் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தினை தற்போது, தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து, வரலாற்று சிறப்பு அம்சங்களை நேரில் பார்த்து, அறிந்து கொண்டு வருகின்றனர்.

தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கி வரும் கீழடி அருங்காட்சியகத்திற்கு, சுற்றுலா, பண்பாடு (ம) அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மற்ற அருங்காட்சியகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை, கீழடி அருங்காட்சியகத்திலும் பின்பற்றிடும் பொருட்டு, பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை அளித்தும் அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களான ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை அளித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறையான பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் மேற்கண்ட தேசிய விடுமுறை நாட்களை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story