முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை:  விவசாயிகள்  ஆர்ப்பாட்டம்
X

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டப்படும் என தனது உரையில் குறிப்பிட்ட ஆளுனருக்கு கண்டனம் தெரிவித்து முல்லை பெரியாறு விவசாய சங்கத்தினர் மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது என்றார்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டப்படும் என தனது உரையில் குறிப்பிட்ட ஆளுனருக்கு கண்டனம் தெரிவித்து முல்லை பெரியாறு விவசாய சங்கத்தினர் மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள சட்டப் பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, கேரள மக்களின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம் என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து, அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையான நீரை பகிர்ந்து கொள்கிறோம். அதேநேரத்தில், கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீரை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் 125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது என தெரிவித்தார். இதற்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அனைத்து விவசாய சங்கம் சார்பில் கேரள அரசையும்,மத்திய அரசையும், ,கண்டித்தும் ஆளுனர் திரும்ப பெற கோரி கோஷம் எழுப்பினர். முன்னதாக மறியல் போராட்டம் அறிவித்த நிலையில், போலீஸார் மறியல் என்றால் அனைவரையும் கைது செய்வோம் என்று கூறியதால் ஆர்ப்பாட்டத்தை மட்டும் பதிவு செய்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself