சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி: ஆட்சியர்!

சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி: ஆட்சியர்!
X
கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்: ஆட்சியர்

கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் மொத்தம் 220000 மாட்டினங்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 4-வது சுற்று தடுப்பூசி பணியினை , மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் துவக்கி வைத்து தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் கால்நடை மருந்தகம் எல்லைக்குட்பட்ட பிரவலூர் ஊராட்சியில், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 4-வது சுற்று தடுப்பூசிப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் துவக்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான தமிழக அரசு கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், கால்நடைகளின் நலன் காத்திடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும், அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சார்பில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக 4-வது சுற்று கால் மற்றும் வாய் காணை (கோமாரி) தடுப்பூசி போடும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் , அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக இன்று (06.11.2023) முதல் 21 நாட்கள் வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துறை ரீதியாக வருகை புரிந்து, தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணி சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரவலூர் கிராமத்தில் 300 மாட்டினங்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சிவகங்கை மாவட்டத்திலுள்ள மொத்தம் 220000 மாட்டினங்கள் பயன்பெறவுள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களிலுள்ள பாதுகாப்பான முறையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள 55 குழுவினர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசியினை, கால்நடைகளுக்கு செலுத்துவதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கலிருந்து பாதுகாத்திட முடியும். இதனால், கறவைமாடுகள் பால் உற்பத்தி,எருதுகளின் வேலைத்திறன், கறவைமாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும்.

இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்யினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு,

அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடை செல்வங்களை கோமாரி நோயிலிருந்து பேணி பாதுகாத்திட வேண்டும் என , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (பொ) (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.இரா.கார்த்திகேயன், உதவி இயக்குநர்கள் மரு.எம்.எஸ்.சரவணன், மரு.பி.இராம்குமார் (சிவகங்கை, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு) ஒக்கூர், சோழபுரம், நாட்டரசன்கோட்டை, பாகனேரி, மேலப்பூங்குடி மற்றும் அலவாக்கோட்டை கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!