மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர் வலியூறுத்தல்
![மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர் வலியூறுத்தல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர் வலியூறுத்தல்](https://www.nativenews.in/h-upload/2022/04/30/1525775-rpudayakumar2.webp)
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ
தென் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள முதல் அமைச்சர் முல்லைப்பெரியாறில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் விரிவான ஆய்வைமேற்கொள்ள வேண்டும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
தற்போது, கேரளா அரசு முல்லை பெரியாரில் பல்வேறு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ஆனால், இதுவரை முதலமைச்சர் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. ஆகவே ,தற்போது தென் தமிழகத்திற்கு வந்துள்ள முதலமைச்சர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு மேற்கொண்டு மக்களின் உரிமையை பாதுகாக்கும் வண்ணமும், மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில் முதலமைச்சர், எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பினால் இப்பணி விரைவில் நிறைவேற வலுசேர்க்கும்.
மதுரை மக்களுக்கு 50 ஆண்டுகாலம் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் 1292 கோடி மதிப்பில் குடிநீர் திட்டத்திற்கு. எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் அடிக்கல் நாட்டினார் .அந்தப் பணிகள் நடைபெற்ற பெற்று வந்த நிலையில், தற்போது, இந்தத் திட்டப் பணிகள் எல்லாம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது ,ஆகவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் இந்த பணியினை விரைவுபடுத்தும் வண்ணம் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல் ,58 கால்வாய் திட்டத்திற்கான நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும்.
மேலும், திருமங்கலம் சுங்கச்சாவடியை அகற்றப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் கூறியுள்ளார். ஆகவே, அதையும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செய்திட வேண்டும் முதலமைச்சர் தென்தமிழக பயணம் நலத்திட்ட உதவிகள் வழங்குவது மட்டும் மல்லாது, மக்களின் உரிமையை மீட்கும் பயணமாக அமைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu