/* */

சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு கடனுதவி

சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு கடனுதவி வழங்கப்படும் என ஆட்சியர் ஆஷா அஜித் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு  கடனுதவி
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்கப்பட உள்ளது. இதன்படி, நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவைத்தொழில் தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.300000மும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.300000-ம் வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

மேற்படி குழுவினர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.100000மிகாமல் இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

Updated On: 31 Oct 2023 12:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...