கீழடி அகழாய்வுப் பணி: தொழில்துறை அமைச்சர் ஆய்வு
கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வுப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் கூறியதாவது:
சங்ககால தமிழர்களின் புகழை பறை சாற்றுகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால், உலகளவில் பல்வேறு நாடுகளும் வியக்குகின்ற வகையிலும், வரலாற்றுப் பக்கங்களில் தமிழகம் சிறப்பாக இடம் பெறுகின்ற வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்கள் கொண்ட மாவட்டமாக தமிழகத்தில் திகழ்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர்கள் பார்த்து அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வுப் பணிகளின் போது கிடைக்கப் பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வருகை புரியும் பொது மக்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையிலும், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பகக் கட்டிடம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள், தற்போது சிறப்பாக நிறைவுற்று, தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று, தற்சமயம் முடிவுறும் தருவாயில் உள்ளது.
உலகளவில் புகழ் பெறுகின்ற வகையிலும், பண்டைய தமிழர்களின் புகழினை, பறைசாற்றுகின்ற வகையிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு மேலும் , சிறப்பு சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், 05.03.2023; ஞாயிற்றுக்கிழமை அன்று நேரடியாக இங்கு வருகை புரிந்து, தனது திருக்கரங்களால் திறந்து வைத்து பெருமை சேர்க்கவுளார்கள்.
அதற்கென நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக இன்றைய தினம் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நடைபெற்று வரும் பணிகளை, சிறப்பான முறையில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம், (சென்னை) செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu