சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு : அமைச்சர் தொடக்கி வைப்பு

சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு : அமைச்சர் தொடக்கி வைப்பு
X

கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதில், குறிப்பாக, வரலாற்று சிறப்பு மிக்க நமது சிவகங்கை மாவட்டத்தில், பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் தமிழர் திருநாள் பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதில், கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் புகழ் பெற்ற ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், கண்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறுப் பகுதிகளிலிருந்து 141 காளைகளும், 75 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.இவ்விழாவினை, ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இவ்விழாவில் பங்கு பெற்றுள்ளவர்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்புடனும் இருந்து விழாவை சிறப்பாக நடத்திடுவதற்கு ஒவவொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.முன்னதாக, கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை முன்னிட்டு, மாடுபிடி வீரர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னிலையில், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, காளையார்கோவில் வட்டாட்சியர் பஞ்சவர்ணம், கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பில்லப்பன், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!