அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தக்கூடாது: ஆட்சியர் அறிவிப்பு

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு  நடத்தக்கூடாது: ஆட்சியர் அறிவிப்பு
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி (பைல் படம்)

அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தக்கூடாது என சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு

அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தக்கூடாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையுள்ள காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்கள் (அரசாணை எண்.7 நாள்:21.01.2017-) உள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதி வழங்கப்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. அரசாணையில், அனுமதி வழங்கப்பட்ட (ஜனவரி முதல் மே மாதம் வரை) காலங்கள் தவிர பிற நாட்களில் அனுமதி பெறாமல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்கள் நடத்தக்கூடாது என, கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு விதிமுறைகளை மீறி நடத்தினால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!