சிவகங்கையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு பத்திரம்

சிவகங்கையில் பயிர் காப்பீடு செய்த  விவசாயிகளுக்கு காப்பீட்டு பத்திரம்
X

சிவகங்கையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தில், 2022-2023-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடு பாலிசி பத்திரங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வேளாண்மைத்துறையின் சார்பில், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தில், 2022-2023-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, காப்பீடு செய்யப்பட்ட விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில், நடப்பு ஆண்டில், இதுவரை 60,109 விவசாயிகளால் 63050.72 எக்டேர் பரப்பளவிலான நெல், மிளகாய், நிலக்கடலை மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் காப்பீடு செய்துள்ள பயிர் மற்றும் அதன் பரப்பு, விவசாயிகளால் செலுத்தப்பட்டுள்ள பிரீமியம் தொகை, அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீடு பிரீமியம் மானியத் தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை முதலான விபரங்கள் அடங்கிய பாலிசி பத்திரங்களை, விவசாயிகளுக்கு நேரடியாக இன்றையதினம் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பாலிசி பத்திரங்கள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, காப்பீடு திட்டத்தின் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பாலிசி பத்திரங்கள், பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வட்டார வேளாண்மை தோட்டக்கலை துறையினரால் அந்தந்த வட்டாரங்களிலேயே விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

காப்பீடு செய்துள்ள விவசாயிகள் தங்களின் பாலிசி பத்திரங்களை நேரடியாக பெற்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீடு குறித்த விபரங்களை சரிபார்த்து உறுதி செய்து பயனடைய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business