சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்
X
Farmers' Complaints Day Meeting at Sivagangai:

சிவகங்கை மாவட்டவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 28 -ஆம் தேதி நடைபெறவுள்ளதென மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; வருகின்ற 28.06.2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்; பங்கேற்கும் இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்