சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
X

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  ஆய்வு செய்த ஆட்சியர் ப. மதுசூதனரெட்டி.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 1,354 நிர்ணயிக்கப் பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, முகாம்களின் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் ஆதார் எண்ணை சுய விருப்பத்துடன் இணைத்தல், தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, படிவங்கள் உரிய வழிமுறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டைவைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 01.01.2023ஆம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு, அதாவது 01.01.2005-க்கு முன்னர் பிறந்த தகுதியுடைய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத் திருத்தம், புகைப்பட மாற்றம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை மேற்கொள்ளவும், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் தொடர்பான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த 09.11.2022 முதல் நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்திலுள்ள 1,354 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை இன்றைய தினம் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, 27.11.2022 (ஞாயிறு) நாளைய தினம் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

எனவே, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோர்களிடமும், சிறப்பு முகாம் தவிர்த்து மற்ற அலுவலக வேலை நாட்களிலும் சம்பந்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலரிடமும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வருவாய் கோட்டங்களிலும், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும், நேரில் வர இயலாதவர்கள் என்ற இணையதளம் வாயிலாகவும் மற்றும் மூலமாகவும் விண்ணப்பித்து பயன் பெறலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, காளையார்கோவில் வட்டாட்சியர் சு.உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!