ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை கட்ட இடம்: சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை கட்ட  இடம்: சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி
X

மானாமதுரை 18வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ராஜேஸ்வரி

வார்டு மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை கட்ட 2 சென்ட் இடம் தானமாக வழங்குவதாக கூறி சுயேச்சை வேட்பாளர் பிரச்சாரம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் வேட்பாளர்கள் சுவாரசியமான யுத்திகளை கையாண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சியினருக்கு சவால் விடும் வகையில் சுயேச்சை வேட்பாளர்களும் பலரும் களத்தில் இறங்கி கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 18வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ராஜேஸ்வரி, வார்டு மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும் என்றும், அப்பகுதியில் கழிப்பறையில்லாமல் அவதியடைந்து வரும் காட்டுநாயக்கன் மக்களுக்கு 2 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கி தானமாக வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் , தான் வெற்றி பெற்றால் நகராட்சி நிதியில் அந்த இடத்தில் பொது கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதிகளையும் வீசி வருகிறார். சுயேட்சை வேட்பாளரின் இதுபோன்ற வாக்குறுதிகளால் , பிற வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்காளர்களும் திக்குமுக்காடி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future