சிவகங்கை; கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு!

சிவகங்கை; கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு!
X

கல்விக் கடன்களை வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்.

சிவகங்கை மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று கடனுதவிகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், சிவகங்கையில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமில் , 32 மாணாக்கர்களுக்கு ரூ.02.10 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடனுதவிக்கான ஆணைகளை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், நடைபெற்ற மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், மாணாக்கர்களுக்கு கல்வி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் , அழியா செல்வமான கல்வியை மாணவர்கள் நிரம்பபெற்றிடும் வகையில், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், பள்ளிக் கல்வித்துறைக்கு 40 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும், உயர்கல்வித்துறைக்கு 07 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோரின் நிலையிலிருந்து, மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்தையும் செய்து வருகிறார்.

குறிப்பாக, அரசு பள்ளியில் பயின்று பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு பயில்கின்ற மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/-ஊக்கத் தொகையாக வழங்கிடும் பொருட்டு, புதுமைப் பெண் திட்டமும், தமிழ்ப் புதல்வன் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, மாணாக்கர்களிடையே,உயர்கல்வி கற்பதற்கான ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உயர்கல்வி கற்பதற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு கல்விக்கடன் முகாம்களும் நடத்தி அதன் வாயிலாக மாணவர்கள் பயன்பெறுகின்ற வகையிலும் , தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் மாபெரும் சிறப்பு கல்விக்கடன் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், மாவட்ட அளவில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இன்றைய தினம் சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமினை,முன்னிட்டு நாளாது தேதி வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக்கப்பட்டு, அதன்படி இன்றைய தினம் மொத்தம் 32 மாணாக்கர்களுக்கு ரூ.02.10 கோடி மதிப்பீட்டிலானகல்வி கடன் ஆணைகள் வழங்கப்படுகிறது.

இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட மாணாக்கர்கள் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதியான மாணாக்கர்களுக்குகடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெற செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்தாண்டு மாவட்டத்தில் நான்கு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் வாயிலாக 2,260 மாணாக்கர்களுக்கு ரூ.35.64 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, நடப்பாண்டியல் 3,000 நபர்களுக்கு கல்விக்கடன் உதவிகள் வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, தற்சமயம் வரை மொத்தம் 956 மாணாக்கர்களுக்கு ரூ.14.65 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இம்முகாமினனைப் போன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் முகாம்கள் நடத்தி, கல்விக்கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், கல்வி கடன் பெற்றுள்ள மாணாக்கர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று, தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்எஸ்.பிரவீன் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல துணை மேலாளர் செல்வநாதன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அன்பு, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் ம.கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர்சேங்கைமாறன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வடிவேலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தி ஆரோக்கியசாந்தாராணி, அனைத்து வங்கியாளர்கள், மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!