மானாமதுரையில் அரசு கல்லூரி அமைக்கப்படும் திமுக வேட்பாளர்

மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைப்பேன் என்று திமுக வேட்பாளர் தமிழரசி ரவிகுமார் வாக்குறுதி அளித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் உள்ள முங்கில்ஊரணி ,தெற்குசாத்தனூர், புலவனேந்தல், நல்லாண்டிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்திட வேண்டும் எனகேட்டுக்கொண்டார்.

அவருக்கு செல்லுமிடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர் மாலை அணிவித்தும், உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.. தமிழரசிசிவகுமார் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போது . இந்தத் தேர்தலில் தளபதி ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறை வேற்றபடும். .

இத்தொகுதிக்கு அரசு கலை கல்லூரி துவங்கபடும், மானாமதுரரையில் தரைபாலம் அமைத்துதரபடும்.இதுபோன்று எத்தகைய திட்டங்கள் நிறைவேற்றிடவேண்டுமோ அவை அனைத்து நிறைவேற்றிதரபடும் என கூறினார்.

இத்தொகுதிபக்கம் வந்து மக்களை சந்திக்காத அதிமுவேட்பாளருக்கு இத்தேர்தலில் தக்க பாடம் கற்பித்திட வேண்டும் எனவும் கூறினார்.இப்பிரச்சாரத்தின் போது மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகரசெயலாளரர் பொன்னுசாமி மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!