சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்  நேரில் ஆய்வு
X

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை  ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.

வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றுதன் மூலம் அரசின் குறிக்கோள்கள் எட்டப்படுகிறது

சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்டஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51.55 விழுக்காடு, அதாவது 3.72 கோடி மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் ஊரகப் பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களின் நலத்தை பேணுகின்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாலும் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சியின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளாக கொண்டு செயல்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான பங்கேற்போடு வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றுதன் மூலம் அரசின் குறிக்கோள்கள் எட்டப்படுகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற செய்வது மட்டுமன்றி, மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்துப்பட்டு வருகிறது.

மானமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் 15வது நிதிக்குழுவின் மூலம் ரூ.50,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார ஆய்வக பணிகளை மேற்பார்வையிட்டு மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.48 இலட்சம் மதிப்பீட்டில் வாராச்சந்தை விற்பனைக்கூடாரம் அமைத்தல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் மானமதுரை ஒன்றியம் கல்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி மன்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.46 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி சங்க கட்டிடம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, திட்டத்தின் கீழ் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் மானாமதுரையில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவிசெயற்பொறி யாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரபரமேஸ்வரி, ரஜினிதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil