சிவகங்கை மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்த்திட்டப் பணிகளை ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி
பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள்
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ,தற்போது ரூ.04.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, மாநிலம் முழுவதும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து நகராட்சிப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகள் ஆகியவைகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கென நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வளர்ச்சிப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, பணிகளின் தரம் மற்றும் நிலை ஆகியன தொடர்பாக உரிய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 18 வார்டுகளில் தினசரி சேகரமாகும் 5.100ஆவு குப்பைகளை, பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறப் பகுதியிலுள்ள 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளமீட்புப் பூங்காவில், சேகரிக்கப்பட்டு, அதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய திடக்கழிவுகளை உரிய அகழ்வு முறையில் குப்பைகளை தரம் பிரிப்பதற்கென ரூ.44.27 இலட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
அப்பணிகள் தொடர்பாக ,ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குப்பைகளிலிருந்து பிரிக்கப்பட்ட பழைய திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்திடவும், திடக்கழிவுகளிலிருந்து தரம் பிரிக்கப்பட்ட கண்ணாடிப் பொருட்கள், தோல் பொருட்கள் ஆகியவைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி உரிய பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் பொருட்டும், மேம்பாட்டு வளர்ச்சிகெனவும் இப்பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ன் கீழ் புதிய பேருந்து நிலையம் ரூ.03.75 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கென, கூட்டுறவுத்துறை அமைச்சர், கடந்த 22.03.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அப்பணிகள் தொடர்பாகவும், கட்டுமான நிலைகள் குறித்தும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இதன் சுற்றுச்சுவரின் வெளிப்புறமும் நெடுஞ்சாலை வரை பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியினையும் மேற்கொள்வதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, வருகின்ற மே மாதம் இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இளையான்குடி பேரூராட்சிப் பகுதிக்கென புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதற்கென, புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 ஏக்கர் இடம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அலுவலர்களுடன் நேரில் கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இரா.ராஜா, இளநிலைப் பொறியாளர் சந்திரமோகன், இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu