தடுப்பணையில் தண்ணீரை தேக்காமல் கால்வாயில் திறந்து விடுவதாக புகார்

தடுப்பணையில் தண்ணீரை தேக்காமல் கால்வாயில் திறந்து விடுவதாக புகார்
X

 வன்னிக்குடி கால்வாயில் செல்லும் வைகை நீர்

மானாமதுரை வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் கால்வாயில் திறந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது .

சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை வைகை ஆற்றில் ஆதனூர் என்ற இடத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணை உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் ஆதாரம் உயர இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் . இவ்வாறு தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் கோடை காலங்களில், தடுப்பணையை ஒட்டியுள்ள மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது, மானாமதுரை வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாக மழைத்தண்ணீர் சென்றது , மேலும் வைகை அணையில் திறக்கப்பட்ட உபரி தண்ணீரும் மானாமதுரை வந்து சேர்ந்தது . மானாமநுரை , திருப்புவனம் பகுதிகளில் உள்ள வைகை பாசன கால்வாய்களில் மழைத்தண்ணீருடன் வைகை அணைத் தண்ணீரும் சேர்ந்து சென்றது . இதனால் பாசன கண்மாய்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன .

தற்போது மானாமதுரை, . திருப்புவனம் பகுதிகளில் மழை நின்றுவிட்டது. இதனால் வைகையில் வந்த மழைத் தண்ணீர் வரத்து நின்று விட்டதால் தடுப்பணையில் உள்ள கால்வாய் கதவை மூடி நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக தண்ணீரை தேக்கி வைக்காமல் தண்ணீரை மேற்கண்ட கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு செல்வதற்கு மானாமதுரை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது , வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் திறந்துவிடப்படும் தண்ணீரை மட்டும் தான் ஆதனூர் தடுப்பணையில் தேக்கிவைக்க முடியும் . தற்போது தடுப்பணையில் இருந்து மழைத் தண்ணீர் மட்டுமே வன்னிக்குடி கால்வாயில் செல்கிறது வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் ஆதனூர் தடுப்பணையில் தேக்கப்படும் என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!