திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
X

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டாய்வு தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்ற வைகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டாய்வு தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டாய்வு தொடர்பாகவும், அதன் செயல் பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, ஆண்டாய்வு மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலகப் பணியாளர்களின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும்,

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, உதவி திட்ட அலுவலர் (மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம்) சித்ரா, அலுவலக மேலாளர் (வளர்ச்சி) சு.திருப்பதிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி(வ.ஊ.), ராஜசேகர்(கி.ஊ.) உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!