சிவகங்கை மாவட்டத்தில் குடிமை பொருள் குறைதீர்க்கும் நாள்
சிவகங்கை மாவட்டத்தில், குடிமை பொருள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
குடிமைப் பொருள் தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 216 மனுக்கள் மீது தீர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் குடிமைப் பொருள் தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது.மேற்படி, முகாம்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அலட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் பெயர் நீக்கல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், அங்கீகாரச் சான்று, குடும்ப அட்டை வகை மாற்றம் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம், புகார்கள் குறித்த 219 மனுக்கள் உடனடியாக பெறப்பட்டு, அதில் 216 மனுக்கள் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu