சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்க ளுக்கு பூமி பூஜை: அமைச்சர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்க ளுக்கு பூமி பூஜை: அமைச்சர் பங்கேற்பு
X

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்க ளுக்கு பூமி பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்க ளுக்கு பூமி பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மொத்தம் 08 பள்ளிகளில்ரூ.1143.72 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென, அரசால் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது .

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா- மருதப்பா அரசு மகளி்ர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.அம்மாப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இ.செண்பகப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவைகளில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், அரசின் அனைத்து துறைகளும் கூடுதலாக முன்னேற்றம் பெற்றிடும் வகையில், சிறப்பான நிர்வாகத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள்.

அதில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவைகளை தனது இரு கண்களாக கொண்டு, பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டும், இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக்கூடிய மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் அழியா செல்வமான கல்வியினை நிரம்ப பெற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து, மாணாக்கர்களை பயன்பெற செய்து வருகிறார்கள்.அறிவுப்போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில் மாணவர்கள் நவீன காலத்திற்கு ஏற்றவாறு தங்களது அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.

குறிப்பாக, பெற்றோர்களின் சிரமத்தை பொருளாதார ரீதியாக குறைத்துவிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாணாக்கர்களுக்கும், பெற்றோர்களின் நிலையிலிருந்து அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள். மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திடும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும், தேவையான கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், சமையலறைக்கூடம், நூலகங்கள் மற்றும் மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மொத்தம் 08 பள்ளிகளில் மொத்தம் ரூ.1143.72 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென, அரசின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது.அதன்படி, திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.338.88 இலட்சம் மதிப்பீட்டில் 16 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.அம்மாப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இ.செண்பகப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.84.72 இலட்சம் மதிப்பீட்டில் 04 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட மாத கால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து வகுப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதற்கான இட வசதிகளின் தேவைகளும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதனடிப்படையில், அந்தந்த ஊராட்சிக்குட்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் ஆகியோர் மாணாக்கர்களின் எதிர்கால நலனி்ல் அக்கறை கொண்டு, தங்களின் பங்களிப்பினை அளித்திடும் பொருட்டு நிலங்களை தானமாகவும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.அம்மாப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இ.செண்பகப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.84.72 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 04 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கென சுமார் 4 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை, இப்பகுதியை சார்ந்த செல்வராணி பழனிச்சாமி,நடராஜன், வீரப்பன், ஏ.எல்.போஸ் ஆகியோர் ஒருங்கிணைந்து வழங்கியுள்ளனர். இச்செயல் நமது மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது. அரசுடன் இணைந்து மாணாக்கர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தங்களின் பங்களிப் பினையும் ஏற்படுத்திய மேற்கண்ட நபர்களுக்கு , தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில், நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பிள்ளைகள் தடையில்லா கல்வியினை பெறுவதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகளை உயர்கல்வி கற்பதற்கு ஊக்குவிப்பது பெற்றோர்களின் கடமையாகும். மாணாக்கர்களும் தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது கல்வியில் சிறந்து விளங்கி, தங்களது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தான் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்த், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி சேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியலெட்சுமி, இ.அம்மாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அழகு, ஆறுமுகம் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்த அலுவலர்கள், சி.கே.ஆர் காண்டராக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பூரணி ரூகோ ஆகிய நிறுவனத்தை சார்ந்தோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!