பெண்களுக்கான விருதுகள்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

பெண்களுக்கான விருதுகள்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

தேசிய பெண் குழந்தை தினத்தினை முன்னிட்டு, வீரதிர செயல் புரிந்த 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படும்

தேசிய பெண் குழந்தை தினத்தை (24.01.2023) முன்னிட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும்;, ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.

தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட உரிமைகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு, பாதுகாப்பு, கௌரவம் போன்ற பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஊக்குவித்தல். பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கம்.

மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்குஅரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் தேவதைகள் நடமாடுவதாக ஐதீகம். பெண்குழந்தை பிறந்தாலே மகாலட்சுமி பிறந்து விட்டதாகவே நினைத்து பலரும் கொண்டாடுகின்றனர். பெண் குழந்தைகளின் அருமை தெரியாதவர்கள்தான் பிறந்த உடனே கொல்வதும், அதை வீதியில் வீசியும் செல்கின்றனர். இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் அவசியம் குறுத்து இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது.

2023 ஜனவரி 24 தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதிர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.

மேற்படி, விருதிற்கு சிவகங்கை மாவட்டத்தில், கீழ்க்கண்ட தகுதியினை உடைய 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள் சிவகங்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 28.11.2022 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

13 வயதிற்கு மேல் 18 வயதிற்குள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பர்-இன்படி), பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது, வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு போன்றவைகளுக்கு வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai based healthcare startups in india