சிவகங்கையில் கொத்தடிமைகள் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்பு

சிவகங்கையில் கொத்தடிமைகள் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்பு
X

சிவகங்கையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது

கொத்தடிமைத்தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொத்தடிமைகள் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர் முறைஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரங்கள்மூலம் விழிப்புணர்வு மற்றும் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழிமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது.

உறுதி மொழி...இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமந்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும்,

எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்வாகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரியமுறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்.

முன்னதாக, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து, துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துணடுப் பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், செயலாளர், மாவட்ட சட்டப்பணிகள் கண்காணிப்பாளர் எம்.பரமேஸ்வரி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோட்டீஸ்வரி, சட்டம் சார்ந்த தன்னார்வளர் நாகேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மணிமேகலை, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வி.சாந்தி மற்றும் துறை சார்ந்த ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!