சிவகங்கை மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்.

வருகின்ற 18.07 அன்று சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட 5 கிராமங்களுக்கும் சாக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறும்

”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற 18.07.2024 அன்று சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 5 கிராமங்களுக்கும் சாக்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்குமான முகாம்கள் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், கடந்த 11.07.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 18.07.2024 அன்று ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட ஒக்கூர், கீழப்பூங்குடி,மேலப்பூங்குடி, பிரவலூர், ஒக்கூர் புதூர் ஆகிய கிராமங்களுக்கென ஒக்கூர், கண்ணாத்தாள் திருமண மகாலிலும்

சாக்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட வீரசேகரபுரம், சாக்கவயல், வெங்கவயல், இ.மாத்தூர், மித்ராவயல், பிரம்புவயல், பெரிய கொட்டகுடி, ஆம்பக்குடி, செங்காந்தன்குடி ஆகிய கிராமங்களுக்கென மேலமணக்குடி, நாச்சியார் திருமண மண்டபம், காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என மொத்தம் 13 துறைகளின் சேவைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து ,பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!