சிவகங்கையில் உலக மக்கள் தொகை தினம்: பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர்

சிவகங்கையில் உலக மக்கள் தொகை தினம்: பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர்
X

சிவகங்கையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை நாளையொட்டி  ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்த உறுதி ஏற்பு நிகழ்ச்சி

விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவிகள், பயிற்சிப்பள்ளி செவிலியர்கள், துணை செவிலியர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்றனர்

சிவகங்கை உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு,விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை ,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை தினம் 2023-ஐ முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவியர்கள், பயிற்சிப்பள்ளி செவிலியர்கள், துணை செவிலியர்கள், களப்பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என, சுகாதார துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, திருப்பத்தூர் சாலை, பழைய நீதிமன்ற வாசல் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தாய் சேய் நல மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது.மேலும், இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், உலக மக்கள் தொகை 1987 ஜுலை 11-ல் 500 கோடியை தாண்டியதை தொடர்ந்து, மக்கள் தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 11-ஆம் நாள் உலக மக்கள் தொகை தினமாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.

1947-ல் இந்திய மக்கள் தொகை 35 கோடியாகவும், 2001-ஆம் ஆண்டு 102 கோடியாகவும், 2011-ஆம் ஆண்டு 121 கோடியாகவும், 2021-ஆம் ஆண்டு உத்தேசமாக 138 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2011-ன் படி உத்தேசமாக மக்கள் தொகை 7,21,47,030-ஆக உள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் தேவைகள், பற்றாக்குறைகள் மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழக அரசால் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதன் நோக்கமாக, இளம் வயது திருமணத்ததை ஒழித்தல், இளம் வயது கர்பத்தினை தவிர்த்தல், தேவையற்ற கர்பங்களை தடுத்தல், ஆரோக்கியமான பிறப்பு இடைவெளியினை

உருவாக்குதல், சிறு குடும்ப நெறியினை பாதுகாத்தல், குடும்ப நலத்தில் ஆண்களின் பங்கினை ஊக்குவித்தல், பெண் கல்வியினை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் உள்ளிட்டவைகள் தொடர்பாக பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, “சுதந்திர அமுதப்பெருவிழாவினை கொண்டாடி மகிழ்வோம்! குடும்பநல உறுதி மொழியினை ஏற்றுவளம் பெறுவோம்!!” என்ற கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஜூலை 24-ஆம் தேதி வரை அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்களிப்புடன் உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படவுள்ளது.

அரசின் குடும்ப நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, விழிப்புணர்வு ரதமானது இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாகன ரதமானது மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்திட உள்ளது. இதனை பொதுமக்கள் அறிந்து கொண்டு, கடைபிடித்து, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கே.சத்தியபாமா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.ஏ.கமலவாசன், துணை இயக்குநர்கள் மரு.எம்.விஜய்சந்திரன் (சுகாதாரப்பணிகள்), மரு.ஏ.தர்மர் (குடும்ப நலம்), மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.எம்.பிரபாகரன், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் ம.செந்தில்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் எஸ்.மதியரசு, புள்ளியியல் உதவியாளர் எஸ்.பிருந்தா மற்றும் மாவட்ட குடும்ப நல அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!