நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு? உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு? உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
X

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாசை ஆதரித்து  எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு? என உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார்.

வலிமை வாய்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார் ,நமது வேட்பாளர் சேவியர் தாசை வெற்றி பெறச்செய்யுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிளைக்கழக செயலாளராக இருந்தவர் இன்று இந்த தொகுதியில் நமது கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில்வளமை வாய்ந்தவரை எதிர்த்து நமது வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவதற்கு உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன்.

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது சவால்விட்டு பச்சை பொய்யை அவிழ்த்துவிட்டு வருகிறார். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.

நான் முதல் அமைச்சராக இருந்த போது மாநில நிதியில் 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவேரி குண்டாறு திட்டத்தை தொடக்கி வைத்தேன். அதனை ஸ்டாலின் பதவிக்கு வந்ததும் நிறுத்திவிட்டார். நான் ஒரு விவசாயி எனபதால் அவ்வளவு பெரிய தொகையை அத்திட்டத்திற்கு ஒதுக்கினேன்.

கஜா புயலில் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றியது என்னுடைய தலைமையிலான அதிமுக அரசு. ஆனால் புயல் இல்லாமல் மழை பெய்ததற்கே திமுக அரசால் தாக்குபிடிக்க முடியவில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் என்பதை என்னால் கூற முடியும்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தன்னிடம் ஒரு ரகசியம் இருக்கு என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின்,இதுவரை அந்த ரகசியத்தை சொல்லவே இல்லை. மின் கட்டணம் 52சதவீதமும், வீட்டு வரி ௧௦௦ சதவீதமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடைகளுக்கு வரி, தண்ணீர் வசதி குப்பை வரி, என வரிகளை போட்டு மக்களை வஞ்சித்துள்ளார் ஸ்டாலின்.

3 ஆண்டு கால திமுக ஆட்சியில் 31/2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து சிறை சென்றுள்ள செந்தில் பாலாஜியை தொடர்ந்து பல திமுகவினர் சிறை செல்ல உள்ளனர்.

நீட் தேர்வை அதிமுக அமைச்சர்கள் கையெழுத்திட்டு ரத்து செய்ய முயன்றபோது அதனை நீதிமன்றத்தில் முறையிட்டு தடுத்தவர் பிரபல முன்னாள் அமைச்சரின் மனைவிதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளாட்சி துறையில் 140 விருதுகள் பெற்று நல்லாட்சி கொடுத்தது அதிமுக ஆட்சிதான். செய்தி தொடர்பு துறையினர் ஆளும் திமுகவிற்கு துணைபோகின்றனர். ஆட்சிமாற்றம் ஏற்பாட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!