சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்:
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்:
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், தேசிய சுகாதார ஆணையம் டெல்லியில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், தேசிய சுகாதார ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு அதிகமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களில் ஒருவருக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவரில் ஒருவருக்கும் மாவட்ட தீர்வுக் குழு மூலம் பரிந்துரைக்கப்பட்டு, அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவர் நாகசுப்பிரமணியன் , செந்தில் ,தனியார் மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார் , சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுபாகப்புத் திட்டம்) மு.காமாட்சி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கண்கானிப்பாளர் பாலமுருகன், மாவட்ட புலனாய்வு அலுவலர் முகமதுயாசின் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu