மருது சகோதரர்கள் நினைவு தினத்தன்று மதுபானக் கடைகள் மூடல் : ஆட்சியர் தகவல்..!

மருது சகோதரர்கள் நினைவு தினத்தன்று  மதுபானக் கடைகள் மூடல் : ஆட்சியர் தகவல்..!
X

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் 

மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை குறிப்பிட்ட மதுபானக்கடைகள் மற்றும் FL2 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்துார் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7571, 7740, 7573), மானாமதுரை பகுதியில், இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் (மதுபானக்கடை எண்:7541, 7542, 7544, 7669, 7663, 7680, 7736) மற்றும் எப்.எல்.2.தி/ள்.கிங்ஸ் ரெக்கிரியேஷன் கிளப், திருப்புவனம் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7674, 7675, 7547, 7682 மற்றும் 7670) மற்றும்

தி/ள்.ஸ்டார் ரெக்கிரியேஷன் கிளப், தி/ள் வைகை ஸ்போர்ட்ஸ் கிளப், மடப்புரம், திருப்பாச்சேத்தி அரசு மதுபானக்கடை எண்: 7664, பூவந்தி அரசு மதுபானக் கடை எண்:7615, சிவகங்கை டவுன் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் (மதுபானக்கடை எண்:7514,7552,7556,7577 மற்றும் 7714) மற்றும் 7 ஸ்டார் விளையாட்டு நற்பணி மன்றம், நேரு பஜார், சிவகங்கை, மதகுபட்டி பகுதியில், இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7703,7705) ஆகிய மதுபானக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!