/* */

போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை என்ற நிலையில், தற்போது 2 கோடியே 80 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

தமிழகத்தில் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்.

காரைக்குடியில் புதிய மருத்துவமனையில் 50 லட்சம் மதிப்பிலான 6000 லிட்டர் திரவ ஆக்சிசன் சேமிப்புக் கலனை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் கட்டிட தரம். குறித்து தர வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடந்து வருகிறது. ஏதேனும் முறைகேடு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் . 17,940 ஆக்ஜிஸன் செறிவூட்டிகளை தனியார்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அது தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை என்ற நிலையில், தற்போது 2 கோடியே 80 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குரிய 15 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் செயல்பட்டுவரும் நிலையில், மேலும், 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறியவர்,தமிழகத்தில் மாநகராட்சி மருத்துவமனைகள் போன்று நகராட்சி அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 22 Aug 2021 10:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...