சிவகங்கை நகர திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்

சிவகங்கை நகர திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்
X

சிவகங்கையில் தி.மு.க.வினர் தெரு முனைப் பிரச்சாரம் செய்தனர்.

சிவகங்கை நகர திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

சிவகங்கை நகர தி.மு.க. சார்பில் நகர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில், இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற அடிப்படையில் வீதி வீதியாக சென்று தி.மு.க.வினர் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் அரசு மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு திட்ட பயன்பாடுகள் பற்றி மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அறிவுறுத்தலின்படி சிவகங்கை நகர திமுக சார்பில் நகரமன்ற தலைவரும் நகர செயலாளருமான துரை ஆனந்த் தலைமையில்,திமுகவினர் திமுக அரசின் 2024 -25 ஆம் ஆண்டு நிதிநிலைஅறிக்கை, அரசின் சாதனைகள் அடங்கிய அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை சிவகங்கை நகர் பேருந்து நிலையம், அரண்மனை வாசல், நெல் மண்டி தெரு, நேருபஜார் பல பகுதிகளில் நேரடியாக சென்று பொது மக்களை சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி கழக அரசின் சாதனைகளைப் பற்றி எடுத்துரைத்தனர். பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் வழங்கினார்கள்.

பின்னர் ஸ்டாலின் குரல் என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை வணிக நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் ஒட்டி தின்னை பிரச்சாரம் மூலம் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வில் தொகுதியின் மேற்பார்வையாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகவேல்,மாவட்டத் துணைச் செயலாளர் மணி முத்து,நகர்மன்ற உறுப்பினர்கள் வீனஸ் ராமநாதன்,சரவணன் நகர,தகவல் தொழில்நுட்டஅணி அமைப்பாளர் சதீஷ் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

இதே போன்று, சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் தலைமையில் ,மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திலகவதி முன்னிலையில், குறிஞ்சி நகர் மற்றும்உள்ள பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஸ்டாலினின் குரல் என அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை வழங்கினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!