காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள்: தொற்று பரவும் அபாயம்

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள்: தொற்று பரவும் அபாயம்
X

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் திரளாக கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எஸ்எம்எஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று மாவட்ட மருத்துவ துறையின் சார்பாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.800 பேருக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருந்த நிலையில்,1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம் நடந்த பள்ளியில் கூடினர்.

டோக்கன் வினியோகித்து தடுப்பூசி போட்டாலும் டோக்கன் இல்லாமல் பலபேர் கூடியதால் தனி நபர் இடைவெளி கேள்விக்குறியானது.

மருத்துவ அதிகாரிகள், தன்னார்வலர்கள் முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் விளக்கிக் கூறி அங்கிருந்து அனுப்பினர்.

இருப்பினும் திடீரென்று கூடிய கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதால்,தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யும் போதே போலீஸாரை கொண்டு பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future