காரைக்குடியில் மார்ச் 25 ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
பைல் படம்
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்; மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து 25.03.2023 அன்று காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-ற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.
எனவே ,8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் , டிப்ளமோ, டெய்லரிங் மற்றும் நர்சிங் முடித்த 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில், கலந்து கொள்ளுவதற்கு அனுமதி முற்றிலும் இலவசம். இம்முகாமில் வேலைநாடுநர்கள் தங்களுடைய பயோடேட்டா (சுயவிவரப் படிவம்), ஆதார் அட்டை நகல் மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in)-இல் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இம்முகாம் குறித்த தகவல்களை 04575-240435 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இம்முகாமில், கலந்து கொள்ளும் அனைத்து வேலைநாடுநர்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இம்முகாமில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை, இலவசதிறன் பயிற்சிகளுக் கான பதிவு, சுய வேலைவாய்ப்புக்கான வங்கிக்கடன்கள் பற்றிய ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்படும். மேலும், இம்முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, இந்த அரியவாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி வேலைநாடும் இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu